தொடருந்து இயந்திர சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு நிறைவு!

Friday, October 13th, 2017

தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவு பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலாளருடனான பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தொடருந்து சாரதிகள் உதவியாளர்களை பணிக்கு இணைத்து கொள்ளும் நடைமுறையில் திருத்தங்கள் மேற்கொள்ளாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் மற்றும் தொடருந்து கட்டுப்பாட்டளர்கள் சங்கம் ஆகியன இணைந்து பணிநிறுத்த போராட்டத்தை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: