தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பதவிக்காலம் மேலும் நீடிப்பு!

Tuesday, November 16th, 2021

தேர்தல், வாக்கெடுப்பு முறைமை மற்றும் சட்ட விதிமுறை மறுசீரமைப்பை அடையாளங் காணவும் அது சம்பந்தப்பட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்குமான நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பதவிக்காலம் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சபை முதல்வர் தினேஸ் குணவர்த்தன முன்வைத்த யோசனைக்கு நேற்றையதினம் நாடாளுமன்றில் அனுமதி கிடைத்திருந்தது.

இந்தத் தெரிவுக்குழுவின் முதலாவது கூட்டம் கடந்த மே மாதம் 17 ஆம் திகதி இடம்பெற்றதுடன், அதன் அறிக்கை ஆறு மாதங்களில் முன்வைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் - கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம்!
முன்பள்ளி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் தொடர்பில் அதிக கவனம் எடுக்கப்படும் - வேலணை பிரதேச தவிசாளர் கரணாக...
பிரித்தானியாவின் தீர்மானத்தை அடுத்து, பயங்கரவாதம் தொடர்பாக ஐரோப்பா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தெளிவட...