தேர்தல் ஆணைக்குழுவின் எச்சரிக்கை!

Thursday, June 28th, 2018

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு தாமதித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் கோரிக்கை விடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உரிய காலத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவதை உறுதிசெய்யும் கடப்பாடு தமக்கு உண்டு என்றும் அவ்வாறு நடத்தப்படாவிட்டால் நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டம் வழங்கியுள்ளதென்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் நடத்தப்படாததால் கட்சிகளுக்குள் பல முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன. அத்துடன் புதிய தேர்தல் முறையின் கீழ் தேர்தலை நடத்துவதில் தொழிநுட்ப பிரச்சினைகள் காணப்படுவதாக கட்சிகள் குறிப்பிட்டுள்ளன.

எனினும் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டுமே தவிர தேர்தலை தாமதிக்கக் கூடாதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

கிழக்குஇ வடமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் ஏற்கனவே முடிவடைந்ததைத் தொடர்ந்து அவை கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி இடம்பெறுகிறது.

இதனிடையே வடக்கு வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களின் பதவிக்காலம் இவ்வருட இறுதிக்குள் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


யாழ் மாநகர ஆளுகைக்குட்பட்ட உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை - மாந...
வல்லரசுகளின் மோதல் தளமாக கொழும்பு துறைமுக பொருளாதார நகரம் மாற்றமடையாது - இராஜாங்க அமைச்சர் அஜித் நி...
விலைகள் அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் - வர்த்தகத்துறை அமைச்ச...