தனக்கு பாதுகாப்பு வழங்கப்படுமாயின் அனைத்து உண்மைகளையும் வெளியிடுவேன் மாகந்துரே மதூஷ் CID இடம் வாக்குமூலம்!
Tuesday, May 7th, 2019
தனக்கு பாதுகாப்பு வழங்கப்படுமாயின் தனக்கு தெரிந்த தன்னால் மேற்கொண்ட அனைத்து குற்றச்சாட்டு நடவடிக்கைகள் மற்றும் மறைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் தொடர்பிலான அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்துவதாக மாகந்துரே மதூஷ், குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு தெரிவித்துள்ளதாக குறித்த வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மாகந்துரே மதூஷ் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டது முதல் பயத்துடன் அழுதவண்ணமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துபாய் நாட்டில், அந்நாட்டு பொலிசாரினால் கைது செய்யப்பட்ட மாகந்துரே மதூஷ் நேற்றுமுன்தினம் (05) இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
சுகாதார பணியாளர்கள் நாடுதழுவிய ரீதியல் பணிபகிஷ்கரிப்பு!
கட்டாய பாடமாக தகவல் தொழில்நுட்பம் - கல்வி அமைச்சர்!
அமைச்சர் டக்ளஸ் முன்மொழிவு – அழகுபடுத்தி அபிவிருத்தி செய்யப்பட்ட வேலணை வங்களாவடி நகரம் மக்கள் பாவனைக...
|
|
|


