தேசிய அடையாள அட்டை விநியோகம் ஆரம்பம்!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அடையாள அட்டைக்கான விண்ணப்பங்களை அனுப்புமாறு, பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஆட்பதிவுத் திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ள இடங்களில் அடையாள அட்டைக்கான நிழற்படங்களை எடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
வேலையில்லா பட்டதாரிகள் மீது கண்ணீர்ப்புகை தாக்குதல்!
நீதித்துறைக்கு 20 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு - நீதி அமைச்சர் தெரிவிப்பு!
வடக்கில் பி.சி.ஆர். சோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் - ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் விசேட மருத்த...
|
|