தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி; அரபிக் கடலில் மேலடுக்கு சுழற்சி!

Wednesday, December 7th, 2016

வங்கக் கடலில் தெற்கு அந்தமான் பகுதிக்கு அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டிருக்கிறது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஸ்டெல்லா தெரிவித்துள்ளார்

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு நிலை, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது.

எனினும் இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசான மழைப் பொழிவே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டி உள்ள பகுதியில் புதிதாக மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இந்த சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும், சென்னை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

dec_7

Related posts: