யாழ்., கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!
Sunday, December 6th, 2020
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை 7ஆம் திகதி திங்கட்கிழமையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அறிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலை தொடர்பாக கல்வி அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
புரெவிப் புயல் காரணமாக கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை வடமாகாணம் முழுவதும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
இந்நிலையில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை திங்கட்கிழமையும் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.
Related posts:
திடீரென மயங்கி விழுந்த இளைஞன் பலி!
வடக்கு ஆசிரியர்களுக்கு மேலதிகமாக பணிச் சுமை - கல்வித் திணைக்களத்தைக் கண்டிக்கிறது இலங்கை ஆசிரியர் சங...
நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வன்முறை சம்பவம் - 3 ஆயிரத்து 215 சந்தேக இதுவரை நபர்கள் கைது!
|
|
|


