தீப்பற்றிக் கொண்டது யாழ் பெரியபுலவு மாகாவித்தியாலயம்!

யாழ்ப்பாணம் பெரியபுலவு மகாவித்தியாலயத்தின் சிற்றுண்டிச் சாலையில் ஏற்பட்ட தீ காரணமாக பாடசாலையின் சாரணர் அலுவலகம் தீயிலெரிந்து நாசமாகியுள்து.
சற்றுமுன்னர் குறித்த தீவிபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர் எனவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
மின் ஒழுக்கு காரணமாகவே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது எனவும் சாரணர் அலுவலகத்தில் இருந்து பெறுமதிமிக்க பல பொருட்கள் தீயில் எரிந்து முற்றாக அழிந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஐநாவின் புதிய செயலாளர் பதவியேற்பு!
உலகில் ஒரு கோடியை தாண்டியது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!
யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனுக்கு கொரோனா தொற்றுறுதி!
|
|