திவுலப்பிட்டிய மற்றும் மினுவாங்கொடை கொத்தணிகளில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 23,000ஐ கடந்தது !

Saturday, December 5th, 2020

இலங்கையில் நேற்றையதினம் 517 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் கொரோனா நோயாளர்களுடன் தொடர்புடையவர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய திவுலப்பிட்டிய மற்றும் மினுவாங்கொடை ஆகிய இரட்டை கொத்தணிகளில் தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 23,000ஐ கடந்துள்ளது. இதன்படி அந்த கொத்தணிகளில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 23,005 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் நாட்டில் இதுவரையில் 26,559 பேருக்கு கொவிட்-19 தொற்றுறதியாகியுள்ளது. இந்தநிலையில் தொற்றுதியான 6,922 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

அதேநேரம் கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 406 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இதற்கமைய கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 19,438 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் முதலாவது கொவிட் 19 அலையின் போது கொழும்பு மாநகர எல்லைகுட்பட்ட பகுதியில் 160 கொவிட் 19 தொற்றுறுதியானவர்களே பதிவாகியிருந்த நிலையில் 2 ஆவது அலையில் சுமார் 8,000 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

கொழும்பு மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் காணப்படும் அதிகளவான சனதொகை இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

அத்துடன் 7 இலட்சத்திற்கு அதிகளவான மக்கள் கொழும்பு மாநகர சபைகுட்பட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

இதன்படி ஒரு சதுர கிலோ மீட்டரில் சுமார் 10,000 பேர் வாழ்ந்து வருவதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான அதிகளவான சனத்தொகை கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்களவு தடையாக இருப்பதுடன் கொழும்பு மாநகர எல்லைகுட்பட்ட பகுதிகளில் இதுவரை கொவிட்-19 தொற்றால் 70 பேர் உயிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: