தபால் மூல வாக்களிப்பு: விண்ணப்பிப்புக்கான காலம் நீடிப்பு!

Wednesday, December 13th, 2017

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத்தேர்தல்களின் போது தபால் மூலம் வாக்களிக்க விரும்புவோர் அது தொடர்பில் விண்ணப்பிக்கவேண்டிய கால எல்லையை  எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நீடிக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹம்மட் தெரிவித்தார். இவர் மேலும் தெரிவித்ததாவது:

21 மாவட்டங்களில் நேற்று  வேட்பு மனுக்கோரும் நடவெடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன. 93 உள்ளூராட்சி சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தும் நடவெடிக்கைள் நாளை 13 ஆம் திகதி பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வருகின்றது.

இந்த நிலையில் 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தபால் மூல வாக்களிப்பக்கான விண்ணப்ப இறுதித்திகதி எதிர்வரும் 15 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுறுகிறது. எனினும் 248 உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பிலான விண்ணப்பத்திகதி வித்தியாசப்படுவதால் மொத்தமாக 341 உள்@ராட்சி மன்றங்களுக்கும் என்று பொதுவான விண்ணப்ப முடிவுத்திகதியை நிர்ணயித்துக்குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவின் கவனம் திரும்பியுள்ளது. தபால் மூல வாக்களிப்பு விண்ணப்ப இறுதித் திகதியை 22 ஆம் திகதி வரை நீடிக்க ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.

Related posts: