எம் ஓ பீ பொற்றாசியம் முரியேட்டு உரத்தின் விலையை குறைக்க விவசாய அமைச்சு அவதானம்!

Sunday, February 19th, 2023

இந்த ஆண்டு சிறுபோகத்தின் போது, 50 கிலோகிராம் நிறை கொண்ட எம் ஓ பீ எனப்படும் பொற்றாசியம் முரியேட்டு உரத்தின் விலையை 10 ஆயிரம் ரூபா வரையில் குறைப்பதற்கு விவசாய அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.

விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் இதற்கான அமைச்சரவை பத்திரம் அடுத்தவாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த பெரும்போகத்தின் போது 42 ஆயிரம் மெற்றிக் டன் எம் ஓ பீ உரம், இறக்குமதி செய்யப்பட்டது.

அதில், 50 கிலோ கிராம் நிறையுடைய எம் ஓ பீ எனப்படும் பொற்றாசியம் முரியேட்டு உர மூடை ஒன்று, 19 ஆயிரத்து 500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

எனினும், குறித்த உரத் தொகையில் இதுவரையில் 3 ஆயிரம் மெற்றிக் டன் மாத்திரமே விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், அது முழு உரத் தொகையில் 10 சதவீதத்துக்கும் குறைவாகும் என விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இடைநிறுத்திய பணி இன்றுமுதல் மீண்டும் முன்னெடுக்கின்றது – துறைசார் தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு எ...
மே 9 வன்முறைகள் தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமியுங்கள் – எட்டு சுயாதீன உறுப்பினர்கள் ...
ஓய்வு பெற்றுச் செல்லும் ஊழியர்களுக்கு அரச செலவில் பிரியாவிடை நிகழ்ச்சிகளை நடத்த தடை - திறைசேரி அறிவி...