தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பிக்கும் இறுதி தினம் நிறைவு!

Sunday, December 24th, 2017

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போது தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கை நேற்று(22) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

இன்றைய தினத்திற்கு பின்னர் எந்தவொரு காரணத்திற்காகவும் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை எற்பதில்லை என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை விண்ணப்பிக்காத தகுதியான நபர்கள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உறுதிப்படுத்தும் அதிகாரியிடம் இன்றைய தினத்திற்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், குறித்த விண்ணப்பங்கள் உடனடியாக குறித்த அதிகாரிகளினால் உறுதிப்படுத்தப்பட்டு தேர்தல் தொகுதி தெரிவத்தாட்சி அலுவலகரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts: