தபால் திணைக்கள வாகனம் மூலம் கடிதங்கள், பொதிகள் விநியோகம் – தபால் திணைக்களம்!

Sunday, May 9th, 2021

தபால் ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ள போதிலும், திணைக்களத்திற்கு சொந்தமான வாகனங்கள் ஊடாக கடிதங்கள் மற்றும் பொதிகள் விநியோகிக்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாமதமின்றி கடிதங்களை விநியோகிப்பதற்கு சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் ராஜித்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், நிலவும் கொரோனா தொற்று நிலைமையால் தபால் அலுவலகங்களின் சேவைக்காலம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி தபால் மா அதிபர் கூறியுள்ளார்.

உப தபால் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்கப்பட்டிருக்கும் அதேநேரம், உப தபால் அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாத்திரமே திறக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

000

Related posts: