தபால் ஊழியர்களின் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு – மத்திய தபால் பரிமாற்றகத்தில் 5 இலட்சம் கடிதங்கள் தேக்கம் என பிரதி தபால்மா அதிபர் தெரிவிப்பு!

Wednesday, December 15th, 2021

தபால் ஊழியர்களின் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றகத்தில் சுமார் 5 இலட்சம் கடிதங்கள் தேங்கியுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்

இதேநேரம் இன்று (15) ஊழியர்கள் கடமைக்கு திரும்பியவுடன், கடிதங்களை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதி தபால்மா அதிபர் ராஜித்த ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (13) மாலை 4 மணிமுதல் நேற்று (14) நள்ளிரவு வரை தபால் நிலைய ஊழியர்கள் அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

ஆட்சேர்ப்பு நடவடிக்கை உள்ளிட்ட 24 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்களால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் இணை ஏற்பாட்டாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: