லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவில்லை – லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!

Monday, March 21st, 2022

எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து நிறுவனம் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான தெஷார ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பாகங்களிலும் உள்ள சில விநியோகஸ்தர்கள் நேற்றிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலைகளை தாறுமாறாக உயர்த்தியதாக பல தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், எனினும் விலை அதிகரிக்கப்படவில்லை என அவர் தெரிவித்தார்.

லிட்ரோவின் போட்டியாளர் லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில விநியோகஸ்தர்கள் 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரை ரூ. 4,200 விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

எவரேனும் அதிக விலைக்கு எரிவாயுவை விற்பனை செய்வது சட்ட விரோதமாக கருதப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: