இதை உண்டால் சந்ததியே பலியாகும்: எச்சரிக்கை!

Wednesday, September 19th, 2018

இந்த மீன் நீங்க ஒருவர் உண்டால், சந்ததியே பலியாகும்..! உஷாராக இருங்க, மார்கெட்டில் மலிவு விலை என்று வாங்கிடாதீங்க..!

பத்து வருடங்களுக்கு முன்பு வரை இந்த மீனை நாம் அறிந்திருக்க மாட்டோம்.

இது மொய்மீன், பூ விரால், தேளிவிரால் என ஊருக்கு ஊர் வெவ்வேறு பெயர்களில் வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால் உண்மையில் இது ஆஃப்ரிக்கன் கெளுத்தி எனும் மீன்.எப்படியோ ஆசிய நாடுகளுக்குள் பரவி அஸ்ஸாம் பிரம்மபுத்திரா ஆற்றின் வழியாக இந்தியாவிற்கு வந்து சேர்ந்ததாக இதன் வரலாறு கூறப்படுகிறது.

கடற்கரையிலிருந்து தொலைவில் இருக்கும்,கடல் மீன்கள் கிடைப்பது அரிதாக உள்ள மாவட்டங்களில் இது குட்டைகள் அமைத்து செயற்கையாக வளர்க்கப்படுகிறது.

இந்த மீன் அசைவம் மட்டுமே சாப்பிட்டு ராட்சஷதனமாக வளரக்கூடியது.

இந்த மீனின் வருகையால்தான் நம் உள் நாட்டு நன்னீர் மீன்களான அயிரை,உளுவை,ஆரால் போன்றவை அழிந்து வருவதாக மீன்வளத்துறையினர் கூறுகிறார்கள். இது நம்மில் பலருக்கும் தெரிவதில்லை

இந்த மீனுக்கு துரித வளர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு கோழிக்கடையில் இருந்து வீசி எறியப்படும் தேவையற்ற குடல் போன்ற கழிவுகள் இவை இருக்கும் குட்டையில் கொட்டப்படுகின்றன .

இந்த மீன் வளர்ப்பு பல வெளி நாடுகளில் மட்டுமல்ல, நம் இந்திய மாநிலங்கள் பலவற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது

இந்த மீன் சாப்பிடுவோருக்கு பல விதமான தோல் நோய்கள், ஆண்மைக்குறைவு,புற்று நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் அதிகம்.

இது குறித்து பல பத்திரிக்கைகள் பல்வேறு செய்திகள் வெளியிட்டிருக்கின்றன என்றாலும் இன்னமும் இந்த மீன் திருட்டுத்தனமாக வளர்த்து விற்பனை செய்யப்படுகிறது.

இது குறித்து விழிப்புணர்வு கண்டிப்பாக தேவை, நம்மில் பலருக்கும் இது குறித்து விழிப்புணர்வு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..இது நம் மரபுகளை பாதிக்கும் என்பதால், இதை அனைவரது கவனத்திற்கும் கொண்டு செல்லவும். செல்லட்ண்டும்.

Related posts:

6-9 தரங்களுக்கான கல்விநடவடிக்கை குறித்து இரண்டு வாரங்களில் முடிவு - இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம...
25 வீதமான தனியார் பேருந்துகளில் மண்ணெண்ணை பயன்படுத்தப்படுகின்றது - சக்திவள அமைச்சர் உதய கம்மன்பில கு...
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய தனியார் வகுப்புக்களை நடத்த எதிர்வரும் செவ்வாய் நள்ளிரவுமு...

சமூகத்தை நல்வழிப்படுத்த அனைவரும் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டும் - சங்கானைக் கல்விக் கோட்ட அதிபர் ...
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைகளை விரைவாக ஆரம்பிக்கும் நிலை இல்லை - கல்வி அமைச்சர் தெரிவி...
எரிபொருளின் விலையை மேலும் குறைக்க நடவடிக்கை - மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெர...