தனியார் மருத்துவ நிலையங்கள் தொடர்பில் கணக்கெடுப்பு- அமைச்சர் ராஜித!

Wednesday, August 23rd, 2017

 

தனியார் மருத்துவ நிலையங்கள் தொடர்பான கணக்கெடுப்பு ஒன்றை எதிர்வரும் வருடம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண இன்று நாடாளுமன்ற அமர்வின் போது எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் வகையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,இலங்கையில் மருத்துவர்கள் மூலமாக பதிவு செய்யப்பட்ட தனியார் மருத்துவ நிலையங்களின் எண்ணிக்கை 205 ஆகும்.

இவற்றில் 88 முழுநேர அடிப்படையிலும் 117 மருத்துவ நிலையங்கள் பகுதி நேர அடிப்படையிலும் இயங்கி வருகின்றன. எதிர்வரும் 2018ம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் தனியார் மருத்துவ நிலையங்கள் தொடர்பான கணக்கெடுப்பு ஒன்றை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts: