தனியார் துறையிடமிருந்து மின்சாரம் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

Sunday, January 15th, 2017

நாட்டில் நீர் மின்சார உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளதன் காரணமாக 60 மெகாவோட் மின்சாரத்தை தனியார் துறையிடமிருந்து கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளாந்த நீர் மின்சார உற்பத்தி 12 முதல் 15 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.பற்றாக்குறையாக உள்ள மின்சாரத்தை அனல் உள்ளிட்ட வேறு மூலங்களில் இருந்து பெற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.

இதுதவிர தனியார் துறையிடமிருந்தும் தேவையான மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான உடன்படிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். இதேவேளை, மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் 34 வீதமாகக் குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Electricity-415x260

Related posts: