தகுதியான பாடசாலை அதிபர்களை நியமிப்பதற்கு அமைச்சரவை முடிவு!

Saturday, November 12th, 2016

பாடசாலைகளில் அதிபர் நியமனங்களில் தகுதியானவர்களை உரிய இடத்தில் நியமிக்காது தகுதியற்றவர்களை பாதுகாப்பதற்கு சில மாகாண சபை முயற்சிப்பது கவலைக்குரிய விடயமாகுமென்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் அநீதி இழைக்கப்பட்ட அதிபர்களுக்காக தாம் முன்னிற்பதாகவும் தகுதியான அதிபர்களை உரிய வகையில் நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்சில மாகாண சபைகள் அமைச்சரவை தீர்மானங்களுக்கு முரண்பட்ட வகையில் செயற்படுகின்றன.  கடந்த காலங்களில் அரசியல் நலன்கருதி, பதில் அதிபர்களாக நியமிக்கப்படடவர்களை பாதுகாப்பதற்கு சில மாகாண சபைகள் செயல்படுகின்றன என்றும் அவர் கூறினார்.பாடசாலை மாணவர்களுக்கான 2017ஆம் ஆண்டு சீருடை வவுச்சர்கள் வழங்கும் நிகழ்வு கல்வியமைச்சில் நேற்று இடமபெற்றது. இதன்போது கலவி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம கொழும்பு முஸ்லிம் மகளிர் கல்லூரிக்கான சீருடை வவுச்சரை வழங்கிளார்.

bccdb16cc1130e5b9b20c190342e4599_XL

Related posts: