ஐ. நா. சபையுடன் ஒப்பந்தம் கைச்சாத்து!

Friday, August 4th, 2017

ஐக்கிய நாடுகளின் நிலையான அபிவிருத்தி கட்டமைப்பின் கீழ், 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் இலங்கையின் நீண்டகால அபிவிருத்திக்கு உதவிகளை வழங்கும் வகையிலான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.

குறித்த ஒப்பந்தமானது, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா முன்னிலையில், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சின் செயலாளர் எம்.ஐ.எம்.ரஃபீக் மற்றும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி ஊனா மெக்விலி ஆகியோருக்கு இடையே கைச்சாத்திடப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் இவ்வேலைத்திட்டத்தின் கீழ், நாட்டு மக்களிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதற்கான தேசிய முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கப்படுவதுடன், அனைத்து மக்களது வாழ்விலும் நேர்மறையான மாற்றம் ஏற்படுத்தப்படும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Related posts: