தகவலறியும் சட்டமூலத்தின் அடுத்தகட்ட விரைவில் நகர்வுகள் !

தகவலறியும் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்குறிய அடுத்தகட்ட நகர்வுகள் இன்னும் சில மாதங்களுக்குள் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்..
இது தொடர்பில் பல வருடங்களாக பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் குரல் கொடுத்து வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தின் 61ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், கடந்த வருடம் ஜனவரி மாதம் 08ம் திகதி முதல் நாட்டின் ஊடகவியலாளர்கள், ஜனாதிபதியையும் விமர்சிக்க முடிந்துள்ளதாக கூறியுள்ளார். இதற்கு முன்னர் இருந்த எந்தவொரு ஜனாதிபதியையும் இதுபோன்று விமர்சிக்க முடியவில்லை.
நாம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், ஊடகவியலாளர்கள கொலை செய்யப்பட்டனர். அச்சுறுத்தப்பட்டனர். இவை அனைத்தையும் நாம் இன்று முடிவுக்கு கொண்டு வந்துள்ளோம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
Related posts:
|
|