டெங்கின் தாக்கம் அதிகரிப்பு – நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

Friday, May 17th, 2019

கடும் காய்ச்சல், தலை வலி, வாந்தி, சருமத்தில் சிவப்பு நிறத்திலான தழும்புகள் காணப்படின் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவி வரும் காலநிலை காரணமாக டெங்கு நுளம்புகள் பரவ கூடிய சாத்தியம் காணப்படுவதால் மேற்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை யாழ்ப்பாணம், குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயை பரப்ப கூடிய நுளம்பு வகையின் குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவை குறிப்பாக பாடசாலை, மதவழிபாட்டு தலங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற இடங்களிலேயே காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், இலங்கையின் பல மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: