2,750 மெற்றிக்தொன் அரிசி இலங்கைக்கு சீனா நன்கொடை!

Saturday, November 25th, 2017

வரட்சியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்காக சீனா 2,750 மெற்றிக்தொன் அரிசியை வழங்க முன்வந்துள்ளது.

அண்மையில் ஏற்பட்ட வரட்சியின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டத்திற்கு உதவும் வகையில் சீன அரசாங்கம் அரிசியை நன்கொடையாக வழங்க முன் வந்துள்ளது.

இந்த அரிசியை உத்தியோக பூர்வமாக கையளிக்கும் நிகழ்வு நேற்று முன்தினத் கொழும்பில் இடம்பெற்றது.

இடர்முகாமைததுவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டீன் பெர்னாண்டோ ஆகியோரிடம் இலங்கைக்கான சீனத் தூதுவர் யீ ஷீயென்ககினால் கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது ஆயிரம் மெற்றிக்தொன் அரிசியைக் கையளித்தார்.

இலங்கைக்கு அரிசியைக் கையளிப்பது தொடர்பான உடன்படிக்கையும் இதன் போது கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: