டி.கே.பி.தசநாயக்க கைது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் விளக்கம்!
Monday, July 17th, 2017
இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பூரண விசாரணைகளின் அடிப்படையிலேயே கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்ட சந்தேத்துக்குரியவர்கள் கைது செய்யப்பட்டதாக கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் முப்படையினர் மற்றும் காவற்துறையினர் உள்ளிட்டோரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.கடந்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட குறித்த 11 பேரும் எந்த குற்றச்சாட்டுக்களுடனும் தொடர்பு கொண்டவர்கள் இல்லை.அது மாத்திரமன்றி குறித்த 11 பேருடன் மேலும் 28 பேர் காணாமல் போனதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.எனினும் தற்போது இந்த 11 பேர் தொடர்பிலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மற்றையவர்கள் தொடர்பான விசாரணைகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் காவற்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்
Related posts:
|
|