செலவுகளைக் குறைக்கும் சுற்றுநிருபத்தால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு தடையில்லை – திறைசேரியிடம் கோரப்பட்ட நிதி கிடைக்காமல் போகும் பட்சத்தில் பிரச்சினை ஏற்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு!

Friday, February 3rd, 2023

மீண்டெழும் செலவுகளை 6 வீதத்தால் குறைத்து வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையினால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு இடையூறு ஏற்படாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் தேர்தலுக்கான செலவை குறைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா  தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஏதேனுமொரு வகையில் திறைசேரியிடமிருந்து கோரப்பட்டுள்ள நிதி கிடைக்காமல் போகும் பட்சத்தில், அது பிரச்சினையை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த தொகையை வரவு செலவுத் திட்டத்தினூடாக விடுவிப்பதற்கு சமீபத்தில் நாடாளுமன்றம் அனுமதி வழங்கிளிருந்தது.

இதனிடையே 2023 ஆம் ஆண்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள மீண்டெழும் செலவுகளை 6 வீதத்தால் குறைத்தல் , அரசாங்க செலவுகளை முகாமைத்துவம் செய்தல் தொடர்பில் நிதி பொருளாதார ஸ்திரத்தன்மை, தேசிய கொள்கைகள் அமைச்சினால் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதனிடையே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பெப்ரவரி 22, 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: