டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையே தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வைப் பெற்றுத்தரும் – E.P.D.P. யின்  முல்லை மாவட்ட நிர்வாக செயலாளர் கிருபன்!

Sunday, November 5th, 2017

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைக் காண்பதற்கு டக்ளஸ் தேவானந்தாவின் தலைமை எப்போதும் எமக்கு உறுதுணையாகவே இருக்கின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் நிர்வாகச் செயலாளர் ஜெயராஜ் (கிருபன்) தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் ஒட்டிசுட்டானில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

யுத்த பாதிப்புக்களினால் எமது மக்கள் பேரவலங்களுக்கு உள்ளாகியிருந்த நிலையில் இன்று கிடைக்கப்பெற்றுள்ள ஓரளவு இயல்புச் சூழலில் மக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பி வருகின்றனர்.

இருந்த போதிலும் மக்களின் தேவைப்பாடுகளுக்கு உரிய தீர்வுகள் இதுவரை கிடைக்கப்பெறாமலே காணப்படுகின்றது.

குறிப்பாக இந்த மாவட்ட  மக்கள் கல்வி சுகாதாரம் போக்குவரத்து வீடமைப்பு வசதி போன்ற பல தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்ய முடியாத நிலையில் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த காலங்களில் இம்மாவட்ட மக்கள் உணர்ச்சி பேச்சுக்களுக்கு எடுபட்டு தேசியம் பேசுவோரின் வாய்ச் சவாடல்களுக்கு மயங்கி அவர்களைத் தெரிவு செய்ததன் பயனாகவே மக்களின் இன்றைய இந்த நிலைமை காரணமாக அமைந்துவிட்டது. எனவே இனிவரும் உள்ளுராட்சி சபைத்தேர்தலில் மக்கள் சரியான அரசியல் தலமையாக எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையை ஏற்று அதன்படி எமது கட்சிக்கு ஆதரவு வழங்குவார்களேயானால் அவர்களது வாழ்வில் ஒளியேற்ற நாம் தயாராக இருக்கின்றோம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts: