ஜூலை 1 வரை கம்மன்பிலவுக்கு விளக்கமறியலில்!

Saturday, June 18th, 2016

இன்று கைது செய்யப்பட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வரையில்விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.

நுகேகொட பாகொட வீதியில் உள்ள அலுவலகத்தில் வைத்து இன்று காலை கம்மன்பில கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

போலி ஆவணங்களின் ஊடாக அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றின் பங்குகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே கம்மன்பில விசேட விசாரணைப்பிரிவில்முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: