ஜுலை 16,17,19 இல் 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு வருகைதரும் – நிதி செலுத்தப்பட்டுவிட்டதாக துறைசார் அமைச்சர் கஞ்சன தெரிவிப்பு!

Tuesday, July 12th, 2022

இந்த வாரத்தில் மூன்று எரிபொருள் கப்பல்கள் நாட்டை வந்தடையும் எனவும் அதற்கான நிதி செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள எரிசக்தி மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதையடுத்து தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருளுக்கான நெருக்கடி நிலை ஓரளவு தணியும் என எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் டீசல் கப்பலொன்று எதிர்வரும் 15 ஆம் திகதிக்குள் நாட்டை வந்தடையும் என்றும் அத்துடன் மசகு எண்ணெய் கப்பலொன்று இம்மாதம் 14 – 16 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நாட்டை வந்தடையுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலுமொரு சுத்திகரிக்கப்படாத எரிபொருளைத் தாங்கிய கப்பலொன்று எதிர்வரும் 15 – 17 ஆம் திகதிக்கிடைப்பட்ட காலத்தில் நாட்டை வந்தடையுமென்றும் அந்தக் கப்பல் நாட்டை வந்தடைந்ததும் அதற்கான நிதியை செலுத்தவேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, இம் மாதம் 17 – 19 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலத்தில் நாட்டுக்கு வரவுள்ள பெற்றோல் கப்பலுக்கான மீதமான தொகையை செலுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: