ஜனாதிபதி ரணில் விக்கரசிங்க – பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி சந்திப்பு!

Saturday, February 11th, 2023

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

நட்பு நாடுகள் என்ற வகையில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலுள்ள நீண்டகால நெருங்கிய உறவை நினைவுகூர்ந்த ஜனாதிபதி, ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா உள்ளிட்ட குழுவினருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

இச்சந்திப்பைக் குறிக்கும் வகையில் ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கியதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

பொது போக்குவரத்து சேவைக்கு எந்த நிவாரணங்களும் இல்லை - இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்!
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பொறுப்புடன் செயற்படவில்லை - நீதியமைச்சர் விஜேயதாச ராஜபக்ஷ குற்றச்சாட்டு!
நம்பிக்கையில்லாத் தீர்மானம் அரசாங்கத்தை பலப்படுத்தும் வகையில் அமையக்கூடாது - நாடாளுமன்ற உறுப்பினர் ...