ஜனாதிபதி கோட்டாபயவின் 73 ஆவது பிறந்த தினம் இன்று!

Monday, June 20th, 2022

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் 73 பிறந்த தினம் இன்றாகும். அதனையொட்டி விசேட மத அனுஷ்டானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதோடு பிறந்த நாள் நிகழ்வை எளிமையாக நடத்தப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சரவை அமைச்சரான டி.ஏ.ராஜபக்ஷ அவர்களின் புதல்வரும் இலங்கையின் 5 வது நிறைவேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோட்டாபய ராஜபக்ஷ 1949 ஆம் ஆண்டு பிறந்தார்.

அவர் கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் கல்வி கற்றதோடு, 1971 இல் இலங்கை இராணுவத்தில் இணைந்தார்.

தனது இராணுவ சேவையின்போது அவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்புக் கற்கைகளில் முதுமாணிப் பட்டமொன்றைப் பெற்றதோடு பாகிஸ்தான், இந்தியா மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் உயர்தரப் பயிற்சிகள் பெற்றார்.

யுத்தகாலத்தில் இலங்கையின் வடக்கு, கிழக்கில் பல பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை ஆணையிட்டு நடத்தினார்.

1991 இல் லெப்டினன் கேர்ணலாக இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னர் அவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில்நுட்பத்தைப் பயின்று அதன்பின்னர் ஐக்கிய அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தார்.

அங்கு கலிபோர்னிய, லொயலா சட்டக் கல்லூரியில் ஒரு தகவல் தொழில்நுட்ப தொழில்வாண்மையாளராகப் பணியாற்றி 2005 இல் இலங்கைக்குத் திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: