பாடசாலைகளை ஒழுங்குபடுத்த கல்வி மேற்பார்வை சபை – கல்வியமைச்சு !

Saturday, July 7th, 2018

அரச பாடசாலைகள், தனியார் மற்றும் தேசிய பாடசாலைகள் என்பவற்றை ஒழுங்குபடுத்துவதற்கு கல்வி மேற்பார்வை சபை ஒன்றை அமைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

கல்வித் தரத்தை உயர்த்தும் அரசாங்கத்தின் கொள்கை வேலைத்திட்டங்களுக்கு அமைய கல்வி மேற்பார்வை சபையை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் கொள்கை திட்டமிடல் மற்றும் செயற்றிறன் ஆய்வு தொடர்பான மேலதிக செயலாளர், பேராசிரியர் மதுரா வெஹேல்ல தெரிவித்துள்ளார்.

இது நியாயமான கல்வி வாய்ப்புகள், ஆசிரியர்களின் தகுதிகள் மற்றும் கல்வியூட்டல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என அவர் தெரிவித்தார்.

இதற்கான நடவடிக்கைகளை மாகாண ரீதியில் விரைவில் முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts:


பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஆபத்து கிடையாது - உலக சுகாதார ஸ்தாபன நிபுணர் தெ...
வெளிநாட்டு தொழில் வாய்ப்பு தொடர்பில் புதிய சட்ட ஏற்பாடுகள் அவசியம் - வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அமைச...
மூன்று பிரதேசங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பயிற்சி நிலையங்கள் - வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரினா...