பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஆபத்து கிடையாது – உலக சுகாதார ஸ்தாபன நிபுணர் தெரிவிப்பு!

Saturday, August 7th, 2021

பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் எந்த ஆபத்தும் இருக்காது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணர் தெரிவித்துள்ளார்.

அதன்படி குழந்தையைப் பெற்றெடுத்தவர்களும் பாலூட்டும் பெண்களும் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என நிபுணர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து தடுப்பூசிகளிலும் உயிருள்ள வைரஸ்கள் இல்லை என்பதனால் அவை தாய்ப்பால் மூலம் பரவுவதற்கான ஆபத்தும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

உண்மையில், தாய்மார்களின் நோய் எதிர்ப்பு சக்தியே தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்குச் செல்லும் என்றும் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: