ஜனாதிபதி கட்டார் விஜயம்!  

Wednesday, October 25th, 2017

கட்டார் மன்னர் தமீம் பின் அஹமட் அல்தானியின் அழைப்பை ஏற்று இருநாள் அரச முறை பயணமாக மேற்கொண்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சென்றடைந்துள்ளார்.

கட்டார் சென்ற ஜனாதிபதியை அந்நாட்டின் பொருளாதார, வர்த்தக அமைச்சர் செய்க் அஹமட் பின் யாசின் பின் மொஹமட் அல்தானி உள்ளிட்ட அந்நாட்டின் விசேட பிரதிநிதிகள் ஜனாதிபதியை வரவேற்றனர்.

கட்டார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் ஜனாதிபதியை வரவேற்க பிரசன்னமாகியிருந்தனர். அதனை தொடர்ந்து ஜனாதிபதி தங்கியிருக்கும் ஹோட்டலிலும் விசேட வரவேற்பு நிகழ்வொன்று தூதரக அதிகாரிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தனது இரண்டுநாள் பயணத்தில் ஜனாதிபதி, கட்டார் நாட்டின் மன்னர், பிரதமர் மற்றும் அந்நாட்டின் அமைச்சர்களை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

Related posts: