ஜனாதிபதி இன்று இந்தியா விஜயம்!

Friday, May 13th, 2016

பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (13) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஊழலுக்கு எதிரான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட ஜனாதிபதி இன்று புதுடில்லிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனை தொடர்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மத்திய பிரதேசத்தில் உச்செயினில் கும்பமேலா நிகழ்விலும் கலந்து கொள்ளவுள்ளார்.

இதன் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.

மேலும் சாஞ்சி பகுதிக்கு செல்லவுள்ள ஜனாதிபதி அங்கு நிர்மானிக்கப்பட்டுள்ள அநகாரிக்க தர்மபாலவின் உருவச் சிலையையும் திறந்து வைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts: