சைட்டம் விவகாரம் தொடர்பில் புதிய குழு : ஜனாதிபதி அறிவிப்பு!

Saturday, February 11th, 2017

சைட்டம் பிரச்சினை தொடர்பில் அனைத்து தரப்பினருக்கும் ஆலோசனை வழங்குவதற்கு குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இவ்வாறு ஆலோசனை குழுவொன்றை நியமிக்கவுள்ளதாக ஜனாதிபதி தனது உத்தியோகப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கம் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் ஆலோசனை வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். அத்துடன், அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சைட்டம் பிரச்சினை தொடர்பிலான பிரேரணையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

article_1486794164-1

Related posts: