சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களில் நிதி இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு!!

Wednesday, October 12th, 2022

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களின் போது இலங்கையின் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க G24 அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

கொரோனா தொற்றுநோய்க்குப் பின்னர் உருவான பல்வேறு புதிய நிதி மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள், பல வளரும் நாடுகளில் புதுப்பிக்கப்பட்ட அபாயங்கள் மற்றும் நிதிச் சுமைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் இணைந்து இலங்கையும் உயர் உணவுப் பணவீக்கம் உட்பட பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள வேளையில், கடன் பிரச்சினைகள், கொடுப்பனவு சமநிலை பிரச்சினைகள் மற்றும் உலகளாவிய நிதி நிறுவனங்களிடமிருந்து தேவையான உதவிகளைப் பெறுவதற்கும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவது முக்கியம் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது இலங்கை எதிர்நோக்கும் பாரிய சவால்கள் மற்றும் அவற்றை சமாளிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் 2022 ஆம் ஆண்டுக்கான ஒன்றிணைந்த மாநாடு வொஷிங்டனில் நேற்றுமுன்தினம் ஆரம்பமானது. இந்த முறை மாநாட்டை அங்கத்துவப்படுத்தி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

வொஷிங்டனில் நேற்றுமுன்தினம் ஆரம்பமானது. இந்த முறை  மாநாட்டை அங்கத்துவப்படுத்தி இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ மற்றும் நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன ஆகியோர் பங்கேற்றுள்ளனர்

000

Related posts:


வரட்சியால் வடக்குகிழக்குபகுதிகள் அதிகளவில் பாதிப்பு - அனர்த்தமுகாமைத்துவமத்தியநிலையம் தெரிவித்துள்ளத...
தற்போதைய பாடத்திட்டங்கள் நாட்டின் தேவைகருதியதாக இருக்கவில்லை – விரைவில் புதுப்பிக்கப்படும் என கல்வி...
அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடமாடும் வர்த்தகர்களின் உரிமங்களை இரத்தாகும் – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ...