செல்வச் சந்நிதியானுக்கு நாளை கொடி!

Friday, August 10th, 2018

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா நாளை மறுதினம் சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிறது.

16 நாள்கள் இடம்பெறும் இந்தத் திருவிழாவில் எதிர்வரும் 24 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சப்பறத்திருவிழாவும் மறுநாள் சனிக்கிழமை தேர்த்திருவிழாவும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும்.

திருவிழாக் காலங்களில் சிறப்பு அபிசேகம், திருமண நிகழ்வுகள், சண்முக அர்ச்சனை அன்னதானம் என்பன போன்ற ஆலய நேர்த்தி நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை திருவிழாவை முன்னிட்டுப் பக்தர்கள் வசதி கருதி சிறப்புப் போக்குவரத்துச் சேவைகள், குடிதண்ணீர், பாதுகாப்பு, சுகாதாரம் போன்ற ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் ஆலயச் சந்நிதிச் சூழலில் அமைந்துள்ள சுமார் 20 அன்னதானம் மடங்களில் அன்னதானம் வழங்க மடாதிபதிகள் ஒழுங்கு செய்துள்ளனர்.

Related posts:


31 ஆம் திகதிக்கு முன்னர் தீர்வு பெற்றுத்தருத்தரப்பட வேண்டும் - அகில இலங்கை தாதியர் சங்கம் கோரிக்கை!
காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த ஜனாதிபதி இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்தார்....
ஜனாதிபதி ஆரம்பித்துள்ள பாடசாலை மூலதனச் சந்தை சங்கங்கள் எதிர்காலத்திற்கான முதலீடாகும் -கொழும்பு பங்க...