செக் குடியரசின் அதிபர் இலங்கை வருகை!

செக்குடியரசின் தலைவர் மிலோஸ் சைமன் (Miloz ziman) அடுத்த வருடம் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
செக்குடியரசின் தலைவரால் இலங்கை தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ப்ரியாணி விஜேசேகரவிடம் இந்த தகவலை அவர் அறிவித்துள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் அவர் இலங்கை வரவுள்ளார்.
அத்துடன் செக்குடியரசின் மக்கள் இலங்கைக்கான சுற்றுலா பிரயாணத்தில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், செக்குடியரசின் ப்ராக் பிரதேசத்தில் இலங்கை தூதரகம் ஒன்றை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஏ.டி.எம் இல் பணம் எடுக்கும் போது 5 ரூபா புதிய வரி அறவீடு செய்யப்படமாட்டாது – நிதி அமைச்சர்!
துறைமுக அபிவிருத்திக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி பூரண ஒத்துழைப்பு!
இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்ற தெரிவுக் குழு!
|
|