சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு – உலகில் சுற்றுலாவுக்கு பொருத்தமான 5 நாடுகளில் இலங்கையும் உள்ளடக்கம் என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவிப்பு!

இலங்கையில், சுற்றுலாப் பயணிகளின் வருகை தற்போது வெகுவாக அதிகரித்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பாரிய பின்புலமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் உலகில் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான ஐந்து நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தடுப்பூசி விடயத்தில் இலங்கை பெரும்பாலும் முன்னணியில் காணப்படுகின்றதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
000
Related posts:
3,700 கோடி டொலர் மசகு எண்ணெய் கடனைச் செலுத்த அரசு இணக்கம்!
போக்குவரத்து விதிமுறை: தண்டப்பணத்தை 30 ஆயிரம் ரூபாவாக உயர்த்த பரிந்துரை!
சிறுநீரகம் கோரி பணிப்பெண்ணை தடுத்து வைத்தார் சவூதி முதலாளி - இலங்கைத் தூதராக அதிகாரிகளின் நடவடிக்கை...
|
|