சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு புதிய Mobile App மார்ச்சில் அறிமுகம – முச்சக்கர வண்டிகளுக்கும் QR குறியீடு – சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவிப்பு!

Monday, February 27th, 2023

சுற்றுலாப் பயணிகளின் நன்மைக்காகவும், பாதுகாப்பை பலப்படுத்தவும், சுற்றுலாத்துறை அமைச்சு மார்ச் 01 ஆம் திகதி முதல் சுற்றுலா மொபைல் செயலியை (Mobile App) அறிமுகப்படுத்தவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

இச்செயலி, மற்ற நாடுகளில் சுற்றுலாத் துறையில் பயன்படுத்தப்படும் சிறந்த மொபைல் செயலிகளில் ஒன்றாகுமென தெரிவித்துள்ள அவர், இந்த செயலியை ஏழு மொழிகளில் இயக்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.

“மொபைல் செயலி அனைத்து முச்சக்கர வண்டிகளையும் பதிவு செய்வதுடன், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஸ்கேன் செய்ய வாகனத்தில் பார் குறியீடு காட்டப்படும்,” என்று அவர் கூறினார்.

இந்த செயலியை கண்காணித்து சந்தேகத்துக்கிடமான அல்லது விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால், பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கும் வசதி அமைக்கப்பட்டுள்ளது. புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், நாட்டின் சுற்றுலாத்துறையில் புதிய அத்தியாயம் திறக்கப்படுகிறது.

நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நோக்கில், அதை மேம்படுத்துவதற்காக வழங்கப்படும் வசதிகள் கொண்ட இந்தசெயலி, எதிர்காலத்தில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

000

Related posts:


வைரஸ் தொற்றுக்கான சாதாரண அறிகுறிகள் தென்படும்போது அவற்றை உதாசீனம் செய்ய வேண்டாம் - பிரதி சுகாதார சேவ...
68 வீதமான பாடசாலை சீருடைத் துணிகள் வலய அலுவலகங்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன - இராஜாங்க அமைச்சரா...
கொள்கை வட்டி விகிதங்களை தற்போதைய மட்டத்திலேயே தொடர்ந்தும் பேணுவதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானம்!