சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் – அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவிப்பு!

Wednesday, October 18th, 2023

சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டத்திற்கான பிரேரனையை நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், இலங்கை சமூகப் பாதுகாப்புச் சபைச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு நிதியமைச்சிடம் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: