நிறைவு செய்யாமல் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்களை முடிக்க தேவையான ஏற்பாடு – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவிப்பு!.

Monday, February 12th, 2024

வேலைகளை நிறைவு செய்யாமல் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்களை முடிக்க தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வருடத்துக்குள் இத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்..

மேலும் கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட வீட்டுக்கடன் மற்றும் உதவித் திட்டங்களை மீண்டும் தொடங்குவதற்கு தேவையான ஒதுக்கீடுகள் ஏற்கனவே நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு  அமைச்சின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

அனுராதபுரம் மாவட்டத்தில் உறுதிப்பத்திரங்கள் மற்றும் கடன் காசோலைகள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு  உரையாற்றும்போதே ஷெஹான் சேமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தற்போதைய வட்டி விகிதத்தை விட குறைந்த வட்டியில் மக்களின் வீட்டுக் கனவை நனவாக்குவதற்கு தேவையான வசதிகளை வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை வழங்கியுள்ளது. பயனாளிகள் கடன்களைப் பெற்றுக் கொண்டு தங்கள் வீடுகளைக் கட்டுவதற்குப் பணத்தைப் பயன்படுத்துவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.

அத்துடன் பெப்ரவரி 15 ஆம் திகதி, அஸ்வெசும புதிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்காக பொருத்தமான பயனாளிகளைத் தெரிவு செய்வதற்குத் தேவையான ஆதரவை வழங்குமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளேன்.

முதல் தடவையாக அஸ்வெசும அமுல்படுத்தப்படும் போது ஆளுநர்களும் மாகாண சபையும் வேலைத்திட்டத்தில் ஈடுபட முடியாமல் போனது. 28 ஆண்டுகால முறைகள் மாறிவிட்டதால், எங்களுக்கு இப்போது அவர்களையும் இதில் ஈடுபடுத்தலாம். அனைத்து மாகாணசபையின் ஆளுநர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அறிவித்து அவர்களின் ஆதரவைப் பெற்று பொருத்தமான பயனாளிகளைத் தெரிவுசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

அதன் பின்னர் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் அதனை உறுதிப்படுத்திய பின்னர் ஜூன் மாதத்திற்குள் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என எதிர்பார்க்கிறோம். அஸ்வெசும பயனாளிகளின் எண்ணிக்கை 20 இலட்சத்தில் இருந்து 24 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: