சுயதொழில்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

வாழும் சூழலுக்கு ஏற்றவாறு தொழில் ரீதியான முயற்சிகளை மேற்கொள்வதற்கு நாம் ஒவ்வொருவரும் எங்களை தயார்ப்படுத்தவேண்டும். அத்தகைய தூரநோக்குள்ள முயற்சிகளை மேற்கொள்வதனூடாகத்தான் எமது பிரதேசங்களையும் எமது வாழ்வியலையும் மேம்படுத்திக் கொள்ளமுடியும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாக குழு கூட்டத்திலேயே அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
எமது இளைஞர்கள் தாம் கற்றுக்கொண்ட தொழில் திறன்களை தமது சுயதொழிலாக உருவாக்கி கொள்வார்களாயின் தொழில் வாய்ப்பு இன்மை என்ற பிரச்சினை குறைக்கப்பட்டுவிடும்.
மக்களது தேவைகளை மேம்படுத்த எமது செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் பல்வேறுபட்ட செயற்றிட்டங்களை மேற்கொண்டிருந்தார். தற்போதும் அவ்வாறான சூழ்நிலைகளை உருவாக்கி கொடுத்து வருகின்றார். எனவே உங்களது வாழ்வாதாரத்திற்கான சுயதொழில் வாய்ப்புக்களை உருவாக்கிக்கொடுக்க நாம் என்றும் தயாராகவே உள்ளோம்.
மக்களது அதிகரித்த பலம் எமக்கு வழங்கப்படுமானால் எதிர்வருங்காலங்களில் உங்கள் வாழ்வாதாரம் மட்டுமல்ல அரசியல் சார்ந்த தீர்வுகளையும் நாம் வென்றெடுத்து தருவொம் என்றார்.
Related posts:
|
|