சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பில் பொதுமககள் அலட்சியம் – கொரோனா மீண்டும் பரவலாம் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Sunday, July 5th, 2020

இரண்டாவது சுற்று கொரோனா ஆபத்தினை தவிர்ப்பதற்கு அரசாங்கம் மேலும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அரச மருத்துவஅதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது சுற்று தொற்று குறித்து ஏற்கனவே அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழுவின் உறுப்பினர் பிரசாத் கொழம்பகே தெரிவித்துள்ளார்.

அறிவிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவது குறித்து மக்கள் மத்தியில் அலட்சியம் காணப்படுவதாக தெரிவித்துள்ள அவர் இதன் காரணமாக ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்.

கொரோனா நெருக்கடி முடிவிற்கு வருகின்றது போல தோன்றினாலும், இரண்டாவது சுற்று ஆபத்திற்கான சாத்தியக்கூறுகள் நிச்சயமாக காணப்படுகின்றன,உலக சுகாதார ஸ்தாபனமும் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது என வைத்தியர் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் பாதிக்கப்பட்ட ஒருவர் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டதையும் அவரது குடும்பத்தை சேர்ந்த பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள அவர் நாட்டின் பல பகுதிகளில் நோய் தொற்று காணப்பட்டால் இரண்டாம் சுற்று ஆபத்து நிச்சயம் உருவாகும் என குறிப்பிட்;டு;ள்ளார்.

சுகாதார பாதுகாப்பு தரப்பினர் இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவேண்டும்,வைரஸ் மீண்டும் பரவுவதை தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும்,அனைத்து பகுதிகள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts:


உரிமை கொண்டாடுபவர்கள்தான் இப்பகுதி அபிவிருத்தியிலும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் - ஐயாத்துரை ஸ்ர...
மின்சார சபைக்கு 50 பில்லியன் ரூபாய் நிலுவையை செலுத்தியது எரிசக்தி அமைச்சு - அமைச்சர் மஹிந்த அமரவீர த...
நாளாந்தம் கொரோனா தரவுகளில் முரண்பாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன - சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...