சுகாதார சேவைத் தரத்தில் இலங்கை முதல் இடத்தில்

Monday, May 22nd, 2017

சுகாதார சேவைத் தரத்தில் இலங்கை தெற்காசிய நாடுகள் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ளது.மரணத்தை ஏற்படுத்தக் கூடிய 32 பாரிய நோய்களுக்கான சிகிச்சைத் தரத்தின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது

195 நாடுகளில் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது இதில் இலங்கை 72.8 புள்ளிகளை பெற்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளை பின்தள்ளியுள்ளது.இந்த ஆய்வில் இந்தியா 44.8 புள்ளிகளையும், பாகிஸ்தான் 43.1 புள்ளியையும் பெற்றுள்ளன

1990ஆம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கணிப்பீட்டில், இலங்கையின் சுகாதாரத்துறை கடந்த 25 வருடங்களில் சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளமையும் தெரியவந்துள்ளது

Related posts: