பிரித்தானியாவிற்கான புதிய உயர்ஸ்தானிர் எலிசபெத் மகாராணியிடம் நியமன கடிதத்தை கையளித்தார்!

Friday, November 18th, 2016
பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்திற்கான புதிய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள அமாரி மந்திக விஜயவர்த்தன தனது நியமன சான்றிதழை 2வது எலிசபெத் மகாராணியிடம் கையளித்தார்.

இது தொடர்பான நிகழ்வு பக்கிங்ஹாம் மாகாராணியி;ன் மாளிகையில் இடம்பெற்றது. உயர்ஸ்தானிகர் விஜயவர்த்தன மாளிகைக்கு 4 இலங்கை இராஜதந்திரிகளுடன் சம்பிரதாய பூர்வமாக அழைத்துச்செல்லப்பட்டார். 2வது எலிசபெத் மகாராணிக்கும் விஜவர்த்தனவிற்கும் இடையில் நட்புறவு ரீதியிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துக்களை 2வது எலிசபெத் மகாராணிக்கு தெரிவித்துக்கொண்டார். இரண்டு நாடுகளுக்கிடையிலான நல்லுறவினை மேம்படுத்துவது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஆவணத்தை கையளித்த பின்னர் உயர்ஸ்தானிகருக்கு மரியாதை நிகழ்வு இடம்பெற்றது. உயர்ஸ்தானிகர் அமாரி விஜேயவர்த்தன 36 வருட நிர்வாக மற்றும் கைத்தொழில் உற்பத்தித்துறையிலும் சந்தைப்படுத்தல் ஏற்றுமதி துறையிலும் அனுபவம்மிக்கவராவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

24d4fcf69c517e75f98944897686f0c2_XL

Related posts: