சுகயீன விடுமுறைப் போராட்டத்தை பிற்போட்டது தபால் சேவை சங்கங்கள் !

Thursday, March 14th, 2019

தபால் சேவை சங்கங்கள் இன்று(14) நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்த சுகயீன விடுமுறைப் போராட்டம் இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

சம்பள பிரச்சினை மற்றும் ஆட்சேர்ப்பு முறைமையில் குறைபாடுகள் நிலவுவதாக தெரிவித்து குறித்த போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்திருந்தனர்.

விடயத்துடன் தொடர்புடைய அமைச்சருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts: