சீரற்ற காலநிலை தொடரும் – எச்சரிக்கிறது அனர்த்த முகாமைத்துவ நிலையம்!

Saturday, July 20th, 2019

சீரற்ற காலநிலை காரணமாக பல மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் பாதிப்பு இடம்பெற்றுவருவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதன்படி இரத்தினபுரி, நுவரெலியா, கண்டி, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட அனர்த்த சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் இருப்பதாகவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனர்த்த நிலைமைகள் தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கும், பொலிசாருக்கும் அறிவிக்க முடியும் எனவும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் 0112-45-45-76 அல்லது 0112-58-72-29 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: