சீனிக்கு கட்டுப்பாட்டு விலை –  அரசாங்கம் !

Tuesday, October 9th, 2018

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சீனிக்காக, 100 ரூபா கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு வாழ்க்கைச் செலவுக் குழு அனுமதி வழங்கியுள்ளதாக கைத்தொழில், வணிக அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் தொடர்பிலான அமைச்சரவை அனுமதியைப் பெறுவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Related posts: