வவுனியாவில் மினி சூறாவழி : பாதிக்கப்பட்ட 54 வீடுகளின் உரிமையாளர்களுக்கும் உடனடி நிவாரணம் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் நடவடிக்கை!

Tuesday, September 1st, 2020

வவுனியா மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த கனமழையை மதற்றும் மினி சூறாவழி காரணமாக பாதிக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு இழப்பிடுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான குலசிங்கம் தீலீபன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தற்போது மழையுடனான காலநிலை காணப்படும் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் நேற்றிரவு வவுனியா மாவட்டத்தின் கணேசபுரம் பகுதியில் பெய்த கடும் மழையை அடுத்து விசிய மினி சூறாவழி காரணமாக 54 விடுகள் கடும் சேதங்களுக்கு உள்ளாகியிருந்தன.

இந்நிலையில் குறித்த மக்களின் பாதிப்புக்களை இன்று காலை நேரில் சென்று ஆராய்ந்தறிந்துகொண்ட குலசிங்கம் தீலீபன் அது தொடர்பில் உடனடியாக மாவட்ட அரச அதிபர் சமன் பந்துல செனவுடன் தோடர்புகொண்டு அக்குடும்பங்களுக்கான உடனடி தேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

இதையடுத்து குறித்த 54 குடும்பங்களுக்கும் உடனடி தேவையாக தரப்பாள்கள் மற்றும் உணவுகள் வழங்கிவைக்கப்பட்டன. அதனை தொடர்ந்தும் நாளையதினம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவி நிவாரணமாக தலா 10 ஆயிரம் ரூபா வழங்கப்படுவத்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஒருங்கிணைப்புக் குழுவின் குலசிங்கம் தீலீபன் தெரிவித்தார். மேலும் குறித்த பாதிப்புகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களது கவனத்திற்கு கொண்டுசென்றுள்ளதுடன் வீடுகளின் உரிமையாளர்களுக்கு முழுமையான இழப்பீடுகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் குலசிங்கம் தீலீபன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது .

Related posts: